பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கூடங்குளம் அணு உலையில் வெந்நீர் குழாய் கசிவு: காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருநெல்வேலி மாவட்டம், கூடன்குளம் அணுஉலையில் புதன்கிழமை நீராவி கலனில் இருந்து வெப்பநீர் கசிவு ஏற்பட்டதில் காயமடைந்த 6 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News image
Updated On :14 மே 2014, 9:08 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், கூடன்குளம் அணுஉலையில் புதன்கிழமை நீராவி கலனில் இருந்து வெப்பநீர் கசிவு ஏற்பட்டதில் காயமடைந்த 6 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராதாபுரம் அருகே கூடன்குளத்தில் அணுஉலை அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள முதல் அணுஉலையில் புதன்கிழமை வழக்கம்போல் மின்சாரம் உற்பத்தி நடைபெற்றது.

அங்குள்ள நீராவி கலனில் இருந்து வெளியேற்றப்பட்ட வெப்பநீர் திடீரென கசிந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அணுஉலையின் நிரந்தர தொழிலாளர்களான கூடன்குளத்தை சேர்ந்த விஞ்ஞானியின் உதவியாளர் பவுல்ராஜ், தொழில்நுட்ப உதவியாளர்களான ராதாபுரத்தை சேர்ந்த செந்தில்குமார், கூடன்குளம் அருகே ஸ்ரீரங்கநாராயணபுரத்தை சேர்ந்த ராஜன் மற்றும் தனியார் நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களான கன்னியாகுமரி மாவட்டம் கேசவன்புதூரை சேர்ந்த ராஜேஷ், மார்த்தாண்டத்தை சேர்ந்த வினு, தென்காசியை சேர்ந்த மகேஷ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த 6 பேரும் நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.