பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

வாக்கு எண்ணும் மையங்களில் இணைய தள வசதி: ஆட்சியர்

திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை விவரங்களை தலைமை தேர்தல் ஆணையருக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் இணையதள வசதி

News image
Updated On :14 மே 2014, 12:31 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை விவரங்களை தலைமை தேர்தல் ஆணையருக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் இணையதள வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதன்கிழமை வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்ட பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு. கருணாகரன் கூறியதாவது:

திருநெல்வேலி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான மேஜைகள், வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்வையிடவும், வாக்கு எண்ணிக்கை விவரங்களை தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வாக்கு எண்ணிக்கை விவரங்களை உடனுக்குடன் தலைமை தேர்தல் அலுவலர், தேர்தல் ஆணையாளருக்கும் தெரிவிக்கும் வகையில் வாக்கு எண்ணும் மையங்களில் இணைய தள வசதி செய்யப்பட்டு்ள்ளது.

மேலும் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை முகவர்களுக்கு தெரிவிக்க வசதியாக நகல் எடுக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பார்வையாளர்கள் அறைகள் மற்றும் செய்தியாளர்களின் அறைகளில் இணையதளம் மற்றும் தொலைக்காட்சி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.