மனித உரிமைக்கழகத் தலைவரும், பட்டதாரி ஆசிரியருமான தம்பிராஜா தலைமையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதன்கிழமை சிதம்பரம் உதவி ஆட்சியர் எம்.அரவிந்தை சந்தித்து முறையிட்டு மனு அளித்தனர். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தேர்தலில் பணியாற்றிய சுமார் ஆயிரம் பேருக்கு புதன்கிழமை வரை தபால் வாக்குகள் வந்து சேரவில்லை என உதவிஆட்சியரிடம் தெரிவித்தனர். அதற்கு பதில் தெரிவித்த உதவிஆட்சியர், இனிமேல் வாக்குகள் அனுப்ப வாய்ப்பில்லை என தெரிவித்தார். இதனால் மிகுந்த ஆசிரியர்கள், அலுவலர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினர்.