ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உலகின் ராட்சத விமானம்: ஹைபிரிட் ஏர் நிறுவனம் சாதனை

ஹைப்ரிட் ஏர்' நிறுவனம் ஒரு விமானம், ஒரு ஹெலிகாப்டர், ஒரு ஏர்ஷிப் ஆகிய மூன்றையும் இணைத்து  உலகையே பிரமிக்க வைக்கும் அளவிற்கு 'ஹெச்ஏவி 304' என்ற

News image
Updated On :15 மே 2014, 10:05 am

வேல்முருகன்

ஹைப்ரிட் ஏர்' நிறுவனம் ஒரு விமானம், ஒரு ஹெலிகாப்டர், ஒரு ஏர்ஷிப் ஆகிய மூன்றையும் இணைத்து  உலகையே பிரமிக்க வைக்கும் அளவிற்கு 'ஹெச்ஏவி 304' என்ற ராட்சத விமானத்தை வடிவமைத்துள்ளது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி பிரிட்டனில் முதன்முதலாக பறந்த இந்த விமானம் உலகின் மிகப்பெரிய விமானம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

302 அடி.  கொண்ட உலகின் நீளமான விமானமான ஹெச்ஏவி 304' க்கு வானத்தில் எழுவதற்கு பிரம்மாண்டமான ரன்வே தேவையில்லை இந்த விமானம் ஹெலிகாப்டர் போல் மேலே எழுந்து பறக்கடியது. 85 அடி உயரமும். 143 அடி அகலமும் கொண்ட இந்த விமானம் மற்ற  விமானங்களைப் போல இது அதிக எரிபொருளைத் தீர்க்காது. ஹீலியம் நிரப்பப்பட்ட ஒரு பலூன் போல இது மிதக்கும் என்பதால் 'ஹெச்ஏவி 304' விமானத்தால்  தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் வரை வானத்தில் பறக்க முடியும்.

ஒரே நேரத்தில் இருபது டன் சரக்குகளை எடுத்துச் செல்லும் திறனுள்ள இந்த விமானத்தை ல்பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவுவதற்கும், மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்கும் இந்த விமானத்தை பயன்படுத்தலாம்.  20 ஆயிரம் அடி உயரரத்தில் பறக்கும் இந்த விமானம் மணிக்கு 148 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.