காதலுக்கு எதிர்ப்பு: காதலியை கொன்று தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரர்

ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் கிராமத்தில் வியாழக்கிழமை ராணுவ வீரர் அவருடைய காதலியை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டார்.
காதலுக்கு எதிர்ப்பு: காதலியை கொன்று தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரர்
Updated on
1 min read

ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் கிராமத்தில் வியாழக்கிழமை ராணுவ வீரர் அவருடைய காதலியை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டார்.

 ஆரணி அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகள் ஹேமலதா(22) என்பவர் கொளத்தூர் ஊராட்சிமன்ற செயலராக பணிபுரிந்து வருகிறார். மேலும் கொளத்தூர் சேர்ந்த சந்திரன் மகன் வீரமணி(26) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

இருவரும் திருமணம் செய்துகொள்ள ஹேமலதா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் வீரமணி தற்போது ராஜஸ்தானில் பணிபுரிந்து வந்து தற்போது இருபது நாள் விடுமுறையில் கொளத்தூருக்கு வந்துள்ளார். இந்நிலையில் இவர்களின் திருமணத்திற்கு ஹேமலதா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் ஹேமலதாவும், வீரமணியும் வியாழக்கிழமை ஹேமலதா வீட்டில் மதுபாட்டிலில் பூச்சி மருந்து கலந்து குடித்துள்ளதாக தெரிகிறது.

அப்போது ஹேமலதா வாந்தி எடுத்துள்ளார். இதனால் ஹேமலதா சாகாமல் போய்விடுவார் என்று எண்ணி வீரமணி மது பாட்டிலை உடைத்து ஹேமலதாவின் கழுத்தை அறுத்துள்ளதாக தெரிகிறது. பின்னர் ஹேமலதாவின் சுடிதாரின் மேல் சால்வை எடுத்து வீட்டிலுள்ள மின்விசிறியில் வீரமணி தூக்கு போட்டுக்கொண்டு இறந்துள்ளதாக தெரிகிறது.

ஹேமலதா வீட்டில் சத்தம் கேட்டதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வீட்டை திறந்து பார்த்ததில் இருவரும் இறந்துகிடந்தனர். இது குறித்து கண்ணமங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததின்பேரில் ஆரணி டிஎஸ்பி என்.மணி, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில் ஆகியோர் இறந்து கிடந்த சடலங்களை கைப்பற்றி விசாரித்ததில் மேற்கண்ட தகவல் தெரியவந்தது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com