கடலூர் தொகுதியில் 2-வது முறையாக வெற்றிக்கனியை சுவைத்த அதிமுக

கடலூர் தொகுதியில் 1998 ஆம் ஆண்டுக்குப்பிறகு 2-வது முறையாக இந்த தேர்தலில் வெற்றிபெற்று அதிமுக சாதனை படைத்துள்ளது.
Updated on
1 min read

கடலூர் தொகுதியில் 1998 ஆம் ஆண்டுக்குப்பிறகு 2-வது முறையாக இந்த தேர்தலில் வெற்றிபெற்று அதிமுக சாதனை படைத்துள்ளது.
 கடலூர் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 9 லட்சத்து 85 ஆயிரத்து 127. வெள்ளிக்கிழமை நடந்த வாக்கு எண்ணிக்கையின் படி அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 4 லட்சத்து 81 ஆயிரத்து 429 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர்  கொ.நந்தகோபாலகிருஷ்ணனைக் காட்டிலும் 2 லட்சத்து 3 ஆயிரத்து 125 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
 இதன்மூலம் அதிமுக 2-வது முறையாக கடலூரைக் கைப்பற்றியிருக்கிறது.இதற்கு முன் கடந்த 1998-ம் நடந்த பொதுத்தேர்தலின் போது அதிமுக சார்பில் எம்.சி..தாமோதரன் இத்தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக இருந்தார். அவருக்கு அடுத்தப்படியாக தற்போது தான் அதிமுக மீண்டும் கடலூரைக் கைப்பற்றியுள்ளது.

15 வேட்பாளர்களுக்கு டெபாசிட்டை காலி செய்த அதிமுக: 
 கடலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சேர்ந்த டாக்டர் கே.நந்தகோபாலகிருஷ்ணன் 2 லட்சத்து 78 ஆயிரத்து 304 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தையும், இவரைத் தொடர்ந்து பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் சி.ஆர்.ஜெய்சங்கர் 1 லட்சத்து 47 ஆயிரத்து 606 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தைப் பிடித்தார்.
 கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.அழகிரி 26 ஆயிரத்து 650 வாக்குகள் மட்டுமே பெற்றார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கு.பாலசுப்ரமணியன் 11ஆயிரத்து 122 வாக்குகள் பெற்றார்.
 தேர்தல் ஆணைய விதிமுறைப்படி பதிவான வாக்குகளில் 6-ல் 1 பங்கு வாக்குகளை பெறுபவர் மட்டுமே டெபாசிட் தொகையை திரும்ப பெற தகுதியுள்ள வேட்பாளராக கருதப்படுவார்.
 இதன் அடிப்படையில் பதிவான மொத்த வாக்கான 9 லட்சத்து 85 ஆயிரத்து 127  வாக்குகளில் 6-ல் ஒரு பங்கான 1 லட்சத்து 64 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றவர் மட்டுமே டெபாசிட் தொகையை திரும்ப பெற முடியும். இதன்படி கடலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எதிர்த்து போட்டியிட்ட 16 பேரில் திமுக வேட்பாளர் கொ.நந்தகோபாலகிருஷ்ணனை தவிர மற்ற 15 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com