சிதம்பரம் மக்களவைத் தொகுதி (தனி): அதிமுக வெற்றி
சிதம்பரம் மக்களவை தனித் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை விட 1,28, 495 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி


சிதம்பரம் மக்களவை தனித் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை விட 1,28, 495 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்: மா.சந்திரகாசி (அதிமுக)- 4,29,536, தொல்.திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)- 3,01041, சுதா மணிரத்தினம் (பாமக)- 2,79,016, ப.வள்ளல்பெருமான் (காங்)- 28,988, கே.ராஜேந்திரன் (பகுஜன் சமாஜ் கட்சி)- 5,179, வி.ஏழுமலை (அகில பாரத ஹிந்து மகாசபை)- 6,824, ஆனந்தன் (சுயே)- 8875, ஏ.சண்முகம் (சுயே)- 1071, என்.சந்திரகாசன் (சுயே)- 1182, கே.செந்தமிழ்ச்செல்வி (சுயே)- 1469, ஏ.திரிசங்கு (சுயே)- 3370, பி.பழனிவேல் (சுயே)- 1772, எஸ்.புஷ்பராஜ் (சுயே)- 1523, எஸ்.பார்வதி (சுயே)- 1543, எஸ்.ராஜ்குமார் (சுயே)- 4896, நோட்டா- 12138. மொத்த வாக்குகள்- 10,88,423.
வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசி்க்கு, தேர்தல் அதிகாரியும், அரியலூர் மாவட்ட ஆட்சியருமான இ.சரவணவேல்ராஜ் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர்களும், தேர்தல் பொறுப்பாளர்களுமான கே.ஏ.செங்கோட்டையன், கே.கே.கலைமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...