பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

அதிமுகவிற்கு குறைந்த வாக்குகள்: காட்டுமன்னார்கோயில் தொகுதி அதிமுகவினர் கலக்கம்!

நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுகவிற்கு குறைந்த வாக்குகளே பதிவாகியுள்ளதால், அதிமுக நிர்வாகிகள்

News image
Updated On :18 மே 2014, 2:32 pm

ஜி.சுந்தரராஜன்

நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுகவிற்கு குறைந்த வாக்குகளே பதிவாகியுள்ளதால், அதிமுக நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட துணைச் செயலாளராக நாக.முருகுமாறன் உள்ளார். இந்நிலையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை விட குறைந்த வாக்குகளே பெற்றுள்ளது.

காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவைத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 58, 442 வாக்குகள் பெற்றுள்ளது. அதிமுக 50,667 வாக்குகளே பெற்றுள்ளது. அதிமுகவைவிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 7,815 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், காட்டுமன்னார்கோயில் அதிமுக நிர்வாகிகளிடம், வாக்குகள் குறைந்தது குறித்து விளக்கம் கேட்டதாக தெரிகிறது. இதனால் காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.