பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நெல்லை அருகே ஆளில்லாத கிராசிங்கில் கார் மீது ரயில் மோதல்: 3 பெண்கள் சாவு

திருநெல்வேலி அருகே சனிக்கிழமை ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்றபோது, மாருதி கார் மீது விரைவு ரயில் மோதியதில் கார் தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் காரில் பின்புறம் இருந்த 3 பெண்கள் சம்பவ இடத்திலே இறந்தனர். காரை ஓட்டி வந்த சேகர குரு உள்ளிட்ட இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

News image
Updated On :18 மே 2014, 2:08 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி அருகே சனிக்கிழமை ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்றபோது, மாருதி கார் மீது விரைவு ரயில் மோதியதில் கார் தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் காரில் பின்புறம் இருந்த 3 பெண்கள் சம்பவ இடத்திலே இறந்தனர். காரை ஓட்டி வந்த சேகர குரு உள்ளிட்ட இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

திருநெல்வேலியில் இருந்து 15 கி.மீ தொலைவில் பொன்னாக்குடி அருகில் பேரின்பபுரம் உள்ளது. இந்த ஆலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 5 ஆவது ஆலய பிரதிஷ்டை பண்டிகையில் சபை மக்கள் கலந்து கொண்டனர். சேகர குருவான மருதகுளத்தை சேர்ந்த சாலமன் மகன் கென்னடி ராஜவதனம் (45) பிரதிஷ்டையில் கலந்து கொண்டார்.

ஆலயத்தில் மாலையில் பண்டிகை ஆராதனை முடிந்ததும் கென்னடி தனது மாருதி சுவிப்ட் காரில் மனைவி ஞானமேரி (44), மகன் ஜெபராணி (20) ஆகியோருடன் மருதகுளம் செல்ல புறபட்டார். அப்போது பொன்னாக்குடி அருகே பாக்கியநாதபுரம் கிராமத்தை சேர்ந்த திரவியம் மனைவி குளோரி (60), குளோரியின் மருமகள் ரூபன் மனைவி ஸ்தோத்திரக்கனி (30) ஆகியோரையும் கென்னடிராஜவதனம் தனது காரில் ஏற்றிக் கொண்டார். காரை கென்னடி ஓட்டி வந்தார்.

ஆலயத்தில் இருந்து புறப்பட்ட அவர் பேரின்பபுரத்தில் உள்ள ஆளில்லாத லெவல் கிராசிங்கை கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் கார் மீது மோதியது.

இந்த விபத்தில் கார் 15 அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்டது.

விபத்தில் காரின் பின்புறத்தில் அமர்ந்திருந்த கென்னடியின் மனைவி ஞானமேரி, குளோரி, ஸ்தோத்திரக்கனி ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே இறந்தனர். காரில் முன்புறத்தில் இருந்த கென்னடியும், அவரது மகன் ஜெபராணிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

சம்பவ இடத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. ரயிலில் பயணம் செய்த ரயில்வே பணியாளர்கள் மற்றும் பயணிகள் விபத்தில் காயமடைந்த கென்னடி, அவரது மகள் ஜெபராணியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலிறந்த திருநெல்வேலி ரயில்வே மேலாளர் செல்லத்துரை, திருநெல்வேலி, நாகர்கோவில் ரயில்வே போலீஸார் மற்றும் டி.எஸ்.பி. க்கள் ராஜா, சிவனேசன் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

திருநெல்வேலி எஸ்.பி. க.ச. நரேந்திரநாயர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

ரயில்கள் தாமதம்: விபத்தில் ரயிலின் முன் பகுதியில் பம்பர் சேதமடைந்து ரயில்வே தண்டவாளத்தில் உரசிய காரணத்தால் உடனடியாக ரயிலை இயக்க முடியவில்லை. திருநெல்வேலியில் இருந்து வந்த ரயில்வே பணியாளர் சீரமைத்த பிறகு மூன்றரை மணி நேரம் தாதமாக ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் கன்னியாகுமரி, அனந்தபுரி ரயில்கள் தாமதமாக திருநெல்வேலிக்கு வந்தது. ரயில் தாமதம் காரணமாக பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.