பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நெல்லை: மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 281 மனுக்கள்

ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் தலைமை வகித்தார். மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள்

News image
Updated On :19 மே 2014, 9:46 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் தலைமை வகித்தார். மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளி உதவித் தொகை, குடிநீர் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி 281 மனுக்கள் வரப்பெற்றன.கோரிக்கை மனுக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பி. உமாமகேஸ்வரி, திருநெல்வேலி கோட்டாட்சியர் க. சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ். நிர்மலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இரா. இளங்கோ, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீரபுத்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் அசோகன், பரமசிவன், மாற்றுத் திறனாளி நல அலுவலர் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.