பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

வடலூர் அருகே தலையில்லா ஆண் சடலம்: சேத்தியாத்தோப்பு அருகே எரிந்த நிலையில் தலை கிடைத்தது

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பரவனாற்றின் கரையோரம் முட்புதரில் ஞாயிற்றுக்கிழமை தலையில்லா ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் சேத்தியாத்தோப்பு அருகே கோவிந்தநல்லூர் பூங்கா அருகே

News image
Updated On :19 மே 2014, 12:31 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பரவனாற்றின் கரையோரம் முட்புதரில் ஞாயிற்றுக்கிழமை தலையில்லா ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் சேத்தியாத்தோப்பு அருகே கோவிந்தநல்லூர் பூங்கா அருகே எரிந்து சிதைந்த நிலையில் திங்கள்கிழமை தலையை போலீஸார் கைப்பற்றினர்.

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள பரவனாற்றங்கரையோரம் உள்ள முடிபுதரில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை காலை நெடுஞ்சாலை ரோந்து போலீஸாரால் கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ஆ.ராதிகா, டிஎஸ்பி கலைச்செல்வன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று தலையில்லா சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் அரசு மருதச்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட இளைஞர் யார், எந்த ஊர் என்ற விபரங்கள் தெரியவில்லை. சடலத்தில் உள்ள ஆணின் கையில் சத்திரியன் என பச்சை குத்தப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரத்திலிருந்து தடய அறவியல் துறை உதவி இயக்குநர் சண்முகம் தலைமையிலான நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சோழத்தரம் காவல் சரகத்தில் புடையூர் சபரி மதகு அருகில் பாதி தலை முடி எரிந்தும், வெட்டுக்காயத்துடன் முகம் சிதைந்த நிலையிலும் தலை கிடந்தது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுரேஷ்பாபு, சோழத்தரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து தலையை கைப்பற்றி, தலையில்லா உடல் வைக்கப்பட்டுள்ள விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.