அக்கினி நட்சத்திரம் விழா நாளை சிறப்பு பூஜைகளுடன் நிறைவு
பழனியில் வருடம்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் திருவண்ணாமலை பவுர்ணமி கிரி போல பழனிக்கோயில் கிரிசுற்றும் நிகழ்ச்சி அக்கினி நட்சத்திரத்தின் போது சிறப்பாக நடைபெறுகிறது. பழனியில்


பழனிக்கோயிலில் அக்கினி நட்சத்திரம் விழா நாளை(மே.21) நிறைவு பெறுகிறது.
பழனியில் வருடம்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் திருவண்ணாமலை பவுர்ணமி கிரி போல பழனிக்கோயில் கிரிசுற்றும் நிகழ்ச்சி அக்கினி நட்சத்திரத்தின் போது சிறப்பாக நடைபெறுகிறது. பழனியில் அக்கினி நட்சத்திரம் கடந்த மே மாதம் 8ம் தேதி தொடங்கியது. அக்கினி துவக்கத்தை முன்னிட்டு பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலில் உள்ள கைலாசநாதர் சன்னதி, மலைக்கோயிலில் உள்ள கைலாசநாதர் சன்னதி உள்ளிட்ட பல கோயில்களில் மூலவருக்கு மேலாக சீதகும்பம் வைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டது.
அக்கினி நட்சத்திரத்தின் சித்திரை மாத கடைசி வாரமும், வைகாசி மாதம் முதல்வாரமும் சிறப்பான நாட்களாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் மலைக்கோயில் கிரிவலப்பாதையில் சஞ்சீவி மூலிகை மணம் வருவதாகவும், அதை நுகர்வோர் வாழ்நாளில் நோய்கள் அகன்று நீண்ட ஆயுள் வாழலாம் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் இந்த நாட்களில் பக்தர்கள் கையில் நறுமண பத்தியை ஏந்தியும், பெண்கள் தலையில் கடம்பைப்பூ சூடியும் கிரிசுற்றுகின்றனர். தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வரும் இந்த அக்கினி நட்சத்திரம் நாளையுடன்(மே.21) நிறைவு பெறுகிறது. நிறைவுநாள் என்பதால் இன்று ஏராளமான பக்தர்கள் கிரியை இருபிரதட்சணங்களிலும் சுற்றுவதற்காக வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை அதிகாலை மலைக்கோயிலில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...