பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மனைவியின் காதை கடித்து துப்பிய கணவர்!

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மருதூர் ஜெயங்கொண்டம் நடுத்தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் (47). கூலித்தொழிலாளியான இவரது மனைவி பெயர் நவநீதம் (40). செந்தில்குமாருக்கு அடிக்கடி செல்போனில்

News image
Updated On :20 மே 2014, 12:34 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே உள்ள மருதூரில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி காதை கணவர் கடித்து துப்பினார். தலைமறைவான கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மருதூர் ஜெயங்கொண்டம் நடுத்தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் (47). கூலித்தொழிலாளியான இவரது மனைவி பெயர் நவநீதம் (40). செந்தில்குமாருக்கு அடிக்கடி செல்போனில் அழைப்பு வந்துள்ளது. இதனை பார்த்த அவரது மனைவி நவநீதம், உங்களுக்கு அடிக்கடி போன் வருகிறது. யார் பேசுகிறார்கள் என கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் திங்கள்கிழமை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில் ஆத்திரமடைந்த கணவர் செந்தில்குமார், மனைவி நவநீதத்தின் இடது காதை பிடித்து கடித்து துப்பிவிட்டு, அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். காதில் ரத்தம் வடிந்த நிலையில் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்ட நவநீதத்தை அருகாமையில் இருந்தவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு நவநீதம் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மருதூர் போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவான கணவர் செந்தில்குமாரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.