சிதம்பரம் அருகே புவனகிரியில் ராஜீவ்காந்தி 23 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புவனகிரி பாலம் அருகே உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அனுஷ்க்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளர் கே.ஜி.குமார் தலைமை வகித்தார். நகரத் ஸவைவர் எம்.செல்வராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் கே.விநாயகம், கைத்தறி கூட்டுறவு சங்க துணைத்தலைவர் கே.ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புவனகிரி முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் கோவி.பழனிசாமி ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ஜி.செளந்தரபாண்டியன் வன்முறை எதிர்ப்பு உறுதிமொழியை படித்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் என்.ராம்குமார், வட்டாரத் தலைவர் என்.லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.