ஸ்ரீவிலி. மசூதியில் தொழுகையின் போது அடிதடி: ஒருவர் காயம்: இருவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர்விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூம்மா புதுப் பள்ளிவாசலில் தொழுகையின் போது இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் ஒருவர் காயம் அடைந்தார்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூம்மா புதுப் பள்ளிவாசலில் தொழுகையின் போது இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் ஒருவர் காயம் அடைந்தார்.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரைக் கைது செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம் அருகே ஜூம்மா புதுப் பள்ளிவாசல் உள்ளது. இங்கு உருது மொழி பேசும் இஸ்லாமியர்களுக்கும், தமிழ் மொழி பேசும் இஸ்லாமியர்களுக்கும் இடையே விரோதம் இருந்து வருகிறது.இந்நிலையில், புதன்கிழமை இரவு மசூதியின் அஸ்ரத்தாக பணிபுரிந்து வரும் மதகுரு வெளியே சென்றிருந்துள்ளார். இதனால் அஸ்ரத்திற்கு உதவியாக இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர், துடியாண்டியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த மைதீன் மகன் அப்துல் நாஸர் (32) என்பவர் தொழுகையை நடத்திக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கிருந்த தைக்காப்பட்டித் தெருவைச் சேர்ந்த மை.ஜாஹூர் உசேன் (44), த.இமாம் காசிம் (35) மற்றும் இருவர் சேர்ந்து, அப்துல் நாஸரைப் பார்த்து புனிதமான இடத்தில் ஒழுக்கக் கேடாக நடக்கும் நீர் எப்படி வந்து பணியாற்றலாம் என்று கூறி இழி சொற்களால் பேசி கம்பால் அடித்துள்ளார்கள். இதில் அப்துல் நாஸர் காயம் அடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அவர், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் ஹென்றி அமலதாஸ் வழக்குப் பதிவு செய்து ஜாஹூர் உசேன் மற்றும் இமாம் காசிமைக் கைது செய்தனர்.இது குறித்து ஜாஹூர் உசேன் நகர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் ஹாஜி அலி, லக்கி குலாம் மைதீன், சிக்கந்தர் பாட்ஷா, அப்துல் நாஸர் மற்றும் பலர் சேர்ந்து தாக்கியதில் இமாம் காசிம் காயம் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பேரிலும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...