ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் உள்ள பள்ளிகளின் 198 வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி வியாழக்கிழமை இந்து மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலக எல்கைக்குட்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் கல்வி நிறுவனங்களின் வாகனங்கள், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படியும், மோட்டார் வாகன சிறப்பு விதிகளின்படியும் உள்ளதா என்பதை கூட்டுத் தணிக்கை செய்யும் முகாம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணகுமார், ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் கே.முரளிதரன், சிவகாசி மோட்டார் வாகன ஆய்வாளர் ஏ.மூக்கன், மாவட்டக் கல்வி அலுவலர் அ.விஷ்ணுதாஸ், தலைமையிட துணை வட்டாட்சியர் வெங்கடாச்சலம் உள்ளிட்ட அலுவலர்கள் வாகனங்களைத் தணிக்கை செய்தனர்.
செய்தியாளர்களிடம் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரேசகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணக்குமார் ஆகியோர் வியாழக்கிழமை மாலை கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குள் உள்ள கல்வி நிறுவனங்களில் மொத்தம் 214 வாகனங்கள் உள்ளன. இவற்றில் 16 வாகனங்கள் தகுதிச் சான்றிதழ் வாங்குதற்கான பணிக்காகச் சென்றுள்ளது. ஏனைய வாகனங்களை கூட்டு ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆய்வுக்குட்டபட்ட வாகனங்களுக்கு பச்சை நிறத்தில் முன்பக்க கண்ணாடியில் ஆய்வு செய்யப்பட்டது என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விடும். கூட்டு ஆய்வில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படும் வாகனங்கள் குறைகளை நிவிர்த்தி செய்து இம் மாதம் 27-ம் தேதிக்குள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காட்டி சான்றிழ் பெற வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அமைதி, பாதுகாப்பு நிறைந்த சூழலில் பண்டிகைகள் அர்த்தமுள்ளதாக மாறும்: உ.பி. முதல்வர்
படப்பிடிப்பில் பாக்யராஜைத் திட்டிய ராதிகா! ஏன்?
பயிர்க் கடன் தள்ளுபடி, கல்விச் செலவு... விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்!

அதிமுக வாக்குகளை விஜய் பிரிப்பாரா..? - பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

