பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் தேனி மாவட்ட பள்ளி மாணவர்கள் மாநில அளவில் 2-ம் இடம் 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில் தேனி மாவட்டத்தில் தேனி மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் எம்.சத்திய செல்வன், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.லோஷினி ஆகிய 2 பேர் 500-க்கு 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 2-ம் இடமும் தேனி மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளனர்.
சத்திய செல்வன் தமிழில் 98 மதிப்பெண்களும், மற்ற பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். இவரது தந்தை முத்தையா பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளராக பணிபுரிகிறார். தாயார் அமிர்தவல்லி, தனது மகன் படிக்கும் மேரி மாதா மெட்ரிக் பள்ளியிலேயே தமிழாசிரியையாக பணிபுரிகிறார். பயோமெட்ரிக் குரூப்பில் சேர்ந்து படிக்க உள்ளதாக கூறும் சத்திய செல்வன் மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து மருத்துவ சேவை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
இதேபோல் மாணவி எஸ்.லோஷினி தமிழ்-99, ஆங்கிலம் 100, கணிதம்-100, அறிவியல்-99, சமூக அறிவியல்-100 மொத்தம் 498 மதிப்பெண் பெற்றுள்ளார். இவரது தந்தை சுப்புராஜ் விவசாய பொறியியல் துறையில் பொறியாளராக பணிபுரிந்து விபத்தில் இறந்து விட்டார். தாயார் பிரமிளாவின் பராமரிப்பில் லோஷினி படித்து வருகிறார். தாயார் அஞ்சல் துறையில் பணிபுரிந்து வருகிறார். மருத்துவராக விருப்பம் தெரிவித்துள்ள லோஷினி கிராமப்புற மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் முத்துத்தேவன்பட்டி, வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வி.பவித்ரா, தேனி, மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் எம்.ஆர்.கோகுல், தேனி மேலப்பேட்டை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.இஷானா பாத்திமா ஆகியோர் 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-ம் இடமும், தேனி மாவட்ட அளவில் 2-ம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வி.பவித்ரா தமிழ் -98, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். எம்.ஆர்.கோகுல் தமிழ் -98, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஏ.இஷானா பாத்திமா தமிழ் -98, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாடல் போட்டு அவமதித்ததாக ஆர்சிபி அணி டிஜே மீது பிசிசிஐயில் புகாரளித்த சிஎஸ்கே.!

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை உமங் செயலியில் பதிவிறக்கம் செய்யும் முறை!

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்தால் அவரவர் வீட்டிலேயே உணவு கிடைக்காது! - மத்திய அமைச்சர்

கோவையில் பரபரப்பு... ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன் விநியோகித்த திமுக நிர்வாகிகளை பிடித்த அதிமுகவினர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

