பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கோடை வெயிலை சமாளிக்க சிதம்பரம் போக்குவரத்து போலீஸாருக்கு பழச்சாறு

சிதம்பரம் காந்திசிலை, பஸ்நிலையம், கீழவீதி சந்திப்பு, தெற்கு சன்னதி சந்திப்பு, பச்சையப்பா சந்திப்பு ஆகிய பகுதிகளில் வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து போலீஸாருக்கு கோடை வெய்யில் முடியும் வரை தினமும்

News image
Updated On :24 மே 2014, 11:32 am

ஜி.சுந்தரராஜன்

கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் சிதம்பரத்தில் போக்குவரத்து போலீஸாருக்கு பழச்சாறு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

சிதம்பரம் காந்திசிலை, பஸ்நிலையம், கீழவீதி சந்திப்பு, தெற்கு சன்னதி சந்திப்பு, பச்சையப்பா சந்திப்பு ஆகிய பகுதிகளில் வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து போலீஸாருக்கு கோடை வெய்யில் முடியும் வரை தினமும் பழச்சாறு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கப்பட்டது. காந்திசிலை அருகே பழச்சாறு வழங்கும் நிகழ்ச்சியை போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்.கே.கோவிந்தசாமி, போக்குவரத்து போலீஸாருக்கு பழச்சாறு வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகர், பிரகாஷ், கண்ணன், தலைமைக் காவலர் சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.