பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

காட்டுமன்னார்கோயில் வைக்கோல் போரில் இருந்த கோயில் கலசம் மீட்பு

காட்டுமன்னார்கோயில் அருகே ஆயங்குடி கிராமத்தில் துரை என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. நிலத்தில் உள்ள வைக்கோல் போரில்,சனிக்கிழமை இரண்டரை அடி உயர கோயில் கலசம் இருந்தது

News image
Updated On :24 மே 2014, 11:12 am

ஜி.சுந்தரராஜன்

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஆயங்குடி கிராமத்தில் வைக்கோல் போரிலிருந்த கோயில் கலசம் ஒன்று சனிக்கிழமை மீட்டெடுக்கப்பட்டது.

காட்டுமன்னார்கோயில் அருகே ஆயங்குடி கிராமத்தில் துரை என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. நிலத்தில் உள்ள வைக்கோல் போரில்,சனிக்கிழமை இரண்டரை அடி உயர கோயில் கலசம் இருந்தது கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் காட்டுமன்னார்கோயில் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று கோபுர கலசத்தை கைப்பற்றி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். கோபுர கலசத்தை சமூக விரோதிகள் திருடி வந்து வைக்கோல் போரில் வைத்து விட்டு சென்றிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து காட்டுமன்னார்கோயில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காட்டுமன்னார்கோயில் பகுதியில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் ஏராளமாக உள்ளன. மிக பழமை வாய்ந்த இக்கோயில்களில் உள்ள கோபுர கலசங்களில் இரிடியம் எனும் விளை உயர்ந்த பொருள் இருப்பதாக நம்பி ஒரு கும்பல் தொடர்ந்து கோபுர கலசங்களை திருடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.