பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றிலிருந்த ஒரு கிலோ கட்டி அகற்றம்

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சி முடசல்ஓடை மீனவ கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் மனைவி சந்திரா (45). இவர்களுக்கு 3 பெண், 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.  கடந்த ஒரு வருடமாக சந்திராவிற்கு

News image
Updated On :24 மே 2014, 9:06 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்த ஒரு கிலோ எடையுள்ள மிகப்பெரிய கட்டியை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சி முடசல்ஓடை மீனவ கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் மனைவி சந்திரா (45). இவர்களுக்கு 3 பெண், 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.  கடந்த ஒரு வருடமாக சந்திராவிற்கு அவ்வவ்போது கடுமையான ரத்தப்போக்கும், வயிற்றுவலி இருந்து வந்தது. இந்நிலையில் சந்திரா சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து சேர்ந்தார். அவரை தலைமை மருத்துவர் அமுதா சிவானந்தம் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்தனர். அப்போது அவரது கர்ப்பபையில் 10 அங்குல விட்டமுள்ள பெரிய கட்டி இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் தனிவார்டில் சந்திரா சேர்க்கப்பட்டு மே 23-ம் தேதி கடலூர் இணை இயக்குநர் (நலப்பணிகள்) டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான மருத்துவக்குழுவினர் 2 மணி நேரம் போராடி சந்திரா வயிற்றிலிருந்த ஒரு கிலோ எடையுள்ள கட்டியை அகற்றினர். அறுவை சிகிச்சையின் போது தலைமை மருத்துவர் அமுதா சிவானந்தம், டாக்டர் சாந்தி, மயக்க மருந்து டாக்டர் ராமச்சந்திரன், செவிலியர்கள் ஆனந்தி, பசுபதிநாதம், உதவியாளர் செளந்தரராஜன் உடனருந்தனர். அறுவை சிகிச்சைக்கு பின் சந்திராவிற்கு ரத்தம் கொடுக்கப்பட்டு நலமாக உள்ளார். மேலும் கட்டியை திசு பரிசோதனைக்காக கடலூர் கிருஷ்ணா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.