கொள்ளிடம் ஆற்றில் இளைஞர் சடலம் கண்டெடுப்பு!
சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் திங்கள்கிழமை காலை கொள்ளிடம் ஆற்றில் இளைஞர் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சிதம்பரம்


சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில், திங்கள்கிழமை காலை மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் திங்கள்கிழமை காலை கொள்ளிடம் ஆற்றில் இளைஞர் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீஸார் விசாரணையில் ஆற்றில் இறந்து கிடந்த இளைஞர் சிதம்பரம் அருகே உள்ள பழைய புவனகிரியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் விநோத்குமார் (27) என்பது தெரியவந்தது. இரண்டு கால்களும் ஊனமுற்ற இவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாராய அல்லது ஆற்றில் தள்ளிவிடப்பட்டாரா? என அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...