பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

போலி மருத்துவர்கள் 3 பேர் கைது

சிதம்பரம் நகரில் சிலர் ஆங்கில மருத்துவத்தில் ஈடுபட்டு நோயாளிகளுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளிப்பதாக டிஎஸ்பி ஆர்.ராஜாராமிற்கு தகவல் வந்தது. இதனையடுத்து டிஎஸ்பி ஆர்.ராஜாராம், நகர போலீஸ்

News image
Updated On :26 மே 2014, 2:04 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் எம்பிபிஎஸ் படிக்காமல் ஆங்கில மருத்துவத்தில் ஈடுபட்ட போலி மருத்துவர்கள் 3 பேரை நகர போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

சிதம்பரம் நகரில் சிலர் ஆங்கில மருத்துவத்தில் ஈடுபட்டு நோயாளிகளுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளிப்பதாக டிஎஸ்பி ஆர்.ராஜாராமிற்கு தகவல் வந்தது. இதனையடுத்து டிஎஸ்பி ஆர்.ராஜாராம், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் திங்கள்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சிதம்பரம் வேங்கான்தெருவில் எஸ்எஸ்எல்சி மற்றும் டிப்ளமா இன் சித்தமருத்துவம் படித்து விட்டு கிளினிக் வைத்து ஆங்கில மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்ட சங்கர் (37), கீழத்தெரு மாரியம்மன் கோயில்தெருவில் பிஎஸ்சி வேளாண்மை மற்றும் பாரம்பரிய சித்த மருத்துவம் படித்துவிட்டு கிருஷ்ணசாமி நினைவு சித்த மருத்துவமனை வைத்து, ஆங்கில மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்ட பாஸ்கர் (65), மற்றும் சிதம்பரம் அண்ணாதெருவில் சாஸ்தா கிளினிக் என்ற பெயரில் தந்தைக்கு பின்னர் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக தனிஅலுவலராக பணியாற்றும் மணிகண்டன் (35) ஆகிய மூவரை கைது செய்தனர். மேலும் மேற்கண்ட மருத்துவமனைகளில் ஆங்கில மருந்துகள், ஊசி உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும் சிதம்பரம் நகர போலீஸார் போலி மருத்துவர்கள் சங்கர், பாஸ்கர் ஆகியோர் மீது இந்திய மருத்துவ தண்டனை சட்டத்தின் கீழ் போலியாக ஆங்கில மருத்துவம் செய்ததாகவும், மணிகண்டன் தனது தந்தை பெயரை வைத்துக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து, ஆங்கில மருத்துவம் பார்த்தாகவும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.