பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஜூன் 1-ல் சிதம்பரத்தில் ஸ்ரீநம்பியாண்டார் நம்பி குருபூஜை

சிதம்பரம் ஞானப்பிரகாசம் வடகரையில் அமைந்துள்ள சேக்கிழார் மணி மண்டபத்தில் திருமுறைகளை தொகுத்து வழங்கிய ஸ்ரீநம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை ஜூன் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :28 மே 2014, 7:11 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஞானப்பிரகாசம் வடகரையில் அமைந்துள்ள சேக்கிழார் மணி மண்டபத்தில் திருமுறைகளை தொகுத்து வழங்கிய ஸ்ரீநம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை ஜூன் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

நம்பியாண்டார் நம்பிகள் சிதம்பரத்தை அடுத்த திருநாரையூரில் அவதரித்தவர். ஆதிசைவராகிய இவர் பொள்ளாப்பிள்ளையாரால் ஆட்கொள்ளப் பெற்றவர். இவர் படைத்த மோதக நிவேதானத்தை பொள்ளாப்பிள்ளையார் ஏற்று அற்பதத்தை நிகழ்ச்சியவர். பொள்ளாப்பிள்ளையார்  திருவருளினால் நடராஜர் கோயிலில் மறைந்திருந்த தேவாரத் திருமுறைகளை சோழன் அபயகுல சேகரன், நம்பியாண்டார் நம்பிகள் துணையுடன் வெளிக் கொண்டு வந்து செப்பேடுகளில் பொறுத்து வைத்தான் என வரலாறு கூறுகிறது.

மேலும் தேவாரத் திருமுறைகளை, 7 திருமுறைகளாக தொகுத்து வழங்கியவர் ஸ்ரீநம்பியாண்டார் நம்பிகள். இவர் தாம் இயற்றிய பத்து பிரபந்தங்களையும் இணைத்து வகைப்படுத்திய நம்பி பாடியவை, திரு இரட்டை மணிமாலை, கோயில் திருபண்ணியர் விருத்தம், திருத்தொண்டர் திருஅந்தாதி, ஆளுடைப் பிள்ளையார் திருவந்தாதி, திருசண்பை விருத்தம், திருமும்மணிக்கோவை, திரு உலாமாலை, திருக்கலம்பகம், திருத்தொகை, திருநாவுக்கரசர் திருஏகாதச மாலை ஆகியனவாகும் பத்து பிரபந்தங்கள் பதினோறாம் திருமுறையில் உள்ளன.

இச்சிறப்பு வாய்ந்த நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை விழா கரந்தை ஜெயகாந்தம் துரைக்கண்ணு சேக்கிழார் விழா அறக்கட்டளை சார்பில் சிதம்பரம் ஞானப்பிரகாசர் குளம் வடகரையில் அமைந்துள்ள சேக்கிழார் மணி மண்டபத்தில் ஜூன் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. குருபூஜையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சிவபூஜை, இன்னிசை நிகழ்ச்சி, சிறப்பு சொற்பொழிவு ஆகியவை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கரந்தை ஜெயகாந்தம் துரைக்கண்ணு சேக்கிழார் விழா அறக்கட்டளை தலைவர் க.சுவாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.