ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மெட்ரோ ரயிலில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையத்திற்கு 40 ரூபாய் கட்டணம்

சென்னையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ரூ.14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது

News image
Updated On :28 மே 2014, 11:06 am

வேல்முருகன்

சென்னையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ரூ.14,600 கோடி செலவில் கடந்த 2008 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. வண்ணாரப்பேட்டையில் இருந்த விமானநிலையம் வரை இரு வழிதடங்களில் 45 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூரத்துக்கு நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

முதல் கட்டமாக வரும் அக்டோபர் மாதம் இறுதியில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு அதில் அரயில் போக்குவரத்து தொடங்கவுள்ளது. 

தற்போது கோயம்பேடு – ஆலந்தூர் இடையே சோதனை ஓட்டமும் நடந்துவருகிறது.. இந்த பாதையில் தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் வரும் அக்டோபர் மாதம் சோதனை நடத்த உள்ளார். அவரது அறிக்கை கிடைத்தபின்  மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கும் தேதி அறிவிக்கப்படும்.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மூன்று இயக்குனர்கள், தமிழக நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஆகியோரை கொண்ட கட்டண நிர்ணயக் குழு பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி மெட்ரோ ரெயில் கட்டணத்தை இறுதி செய்துள்ளது.

அதன்படி சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை செல்ல (24 கி.மீ.) ரூ. 40 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.10. அதற்கு அடுத்ததாக ரூ.15, ரூ.20, ரூ.25, ரூ.30 என்று கட்டணம் வசூலிக்கப்படும்.

 மேலும் சென்னை மெட்ரோ ரெயிலுக்கான கட்டண விவரம் அதிகாரப்பூர்வமாக ஆகஸ்டு மாதம் வெளியிடப்படும்,  இந்நிலையில் கட்டணம் இறுதி செய்யப்பட்டு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வண்ணாரப் பேட்டையில் இருந்து விமான நிலையத்தை 40 நிமிடங்களில் சென்றடையும் வகையில் மெட்ரோ ரயில்34 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும்  என்று மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.