பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி: சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் காவடி

மே.28-ம் தேதி முடிவுற்ற அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியை முன்னிட்டு கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் காவடி எடுப்பவர்களுக்கு அலகு குத்தி காவடிகள் அலங்கரிக்கப்பட்டன. அதன் பின்னர் விக்னேஸ்வர

News image
Updated On :30 மே 2014, 3:04 pm

ஜி.சுந்தரராஜன்

அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் காவடி எடுக்கப்பட்டு ஸ்ரீபாலதண்டாயதபாணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

மே.28-ம் தேதி முடிவுற்ற அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியை முன்னிட்டு கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் காவடி எடுப்பவர்களுக்கு அலகு குத்தி காவடிகள் அலங்கரிக்கப்பட்டன. அதன் பின்னர் விக்னேஸ்வர பூஜை தொடங்கி காவடியில் ஸ்ரீபாலதண்டாயுதபாணியை ஆவஹனம் செய்து பூஜைகள் செய்யப்பட்டு நிவேத்தியம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது.

பின்னர் சிவகங்கையில் இருந்து காவடிகள் ஊர்வலமாக புறப்பட்டு கோயில் உள் பிரகாரம் வலம் வந்து ஸ்ரீ தண்டாயுதபாணி சன்னதியை அடைந்தது. அங்கு சுவாமிக்கு காவடி பால், தயிர் ,தேன், சக்கரை, பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சம் பழம், பன்னீர் சந்தனம் திரவியப்பொடி அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான மக்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீநடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.