இந்தியாவில் புகையிலை பயன்பாட்டால் வரும் நோய்களைக் குணப்படுத்தும் வகையில் அரசிற்கு ஆண்டிற்கு ரூ.1 லட்சம் கோடி வரை செலவாகிறது என்று இந்திய மருத்துவக் கழகத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ.செல்வராஜன் கூறினார்.
உலக புகையிலை எதிர்ப்பு நாளையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்டடத் தொழிலாளர்களிடையே ஐ.எம்.ஏ. சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் அவர் கருத்துரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.
புகையிலை பயன்பாட்டினால் வரும் காசநோய், இருதய நோய், மாரடைப்பு, சுவாசக் கோளாறு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட நோய்களைக் குணப்படுத்த ஆண்டிற்கு சுமார் ரூ.1 லட்சம் கோடி அரசிற்கு செலவாகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரமும், குடும்பப் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. சுற்றுப்புறச் சூழல் மாசடைகிறது. புகையிலை பயன்படுத்தும் பழக்கம் கட்டடத் தொழிலாளர்களிடம் அதிகம் காணப்படுகிறது. இந்த நாளில் புகையிலை பயன்படுத்துவோர், இனி புகையிலை பயன்படுத்த மாட்டேன் என உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அமைதி, பாதுகாப்பு நிறைந்த சூழலில் பண்டிகைகள் அர்த்தமுள்ளதாக மாறும்: உ.பி. முதல்வர்
படப்பிடிப்பில் பாக்யராஜைத் திட்டிய ராதிகா! ஏன்?
பயிர்க் கடன் தள்ளுபடி, கல்விச் செலவு... விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்!

அதிமுக வாக்குகளை விஜய் பிரிப்பாரா..? - பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

