மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

போர் மற்றும் ஆயுத மோதல்கள் சூழலில் சுரண்டல் தடுக்கும் சர்வதேச தினம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்,

Published On :

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், போர் மற்றும் ஆயுத மோதல்கள் சூழலில் சுரண்டல் தடுக்கும் சர்வதேச தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.

தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா முன்னிலை வகித்தார். ஆசிரியை ந.ரெங்கலதா வரவேற்றார்.

தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற  நல்லாசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

உலகில் போர்கள் நடைபெறும் போது, இயற்கை வளங்கள் சுரண்டப்படுகிறது. மரம், வைரங்கள், தங்கம் போன்ற உயர்-மதிப்பு வளங்கள் மற்றும் எண்ணெய், அல்லது அத்தகைய வளமான நிலம் மற்றும் நீர் போன்ற வளங்களை சுரண்டப்படுகிறது. இதுபோன்று இயற்கை வளங்களை சுரண்டுவது சம்பந்தப்பட்ட மோதல்களின் மீட்சியை இருமடங்கு ஆக்கிவிடுகிறது.

வாழ்வாதாரங்களை மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன என்றால் எந்த நீடித்த அமைதி இருக்க முடியாது. இதனைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவற்காக ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு ஆண்டுதோறும் நவம்பர் 6-ம் தேதியை போர் மற்றும் ஆயுத மோதல்கள் சூழலில் சுரண்டல் தடுக்கும் சர்வதேச தினமாக அறிவித்துள்ளது என்றார் அவர். நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை ச.பொன்மலர் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.