புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிதம்பரம் இந்து ஆலய பாதுகாப்பு குழுவினருகு ரீச் ஹெரிடேஜ் விருது

சிதம்பரம் நகரில் நடராஜர் கோயில் தீர்த்தகுளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அக்குளங்களை மீட்டெடுத்த இந்து ஆலய பாதுகாப்பு குழு தலைவர் மு.செங்குட்டுவன், செயலாளர் வி.சந்திரசேகர் ஆகியோருக்கு  சென்னை ரீச் ஹெரிடேஜ் பவுன்டேஷன் என்ற அமைப்பு, ரீச் பவுன்டேஷன் அவார்டு என்ற உயரிய விருதிற்கு தேர்வு செய்துள்ளது.

News image
Updated On :18 நவம்பர் 2014, 1:21 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் நடராஜர் கோயில் தீர்த்தகுளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அக்குளங்களை மீட்டெடுத்த இந்து ஆலய பாதுகாப்பு குழு தலைவர் மு.செங்குட்டுவன், செயலாளர் வி.சந்திரசேகர் ஆகியோருக்கு  சென்னை ரீச் ஹெரிடேஜ் பவுன்டேஷன் என்ற அமைப்பு, ரீச் பவுன்டேஷன் அவார்டு என்ற உயரிய விருதிற்கு தேர்வு செய்துள்ளது.

சிதம்பரம் நகரில் நடராஜர் கோயில் தீர்த்தகுளங்களான திருப்பாற்கடல், ஆயிகுளம், அண்ணா குளம், தச்சங்குளம், ஓமக்குளம், தில்லைக்காளியம்மன் கோயில் குளம், ஓமக்குளம், குளம் என 12 தீர்த்த குளங்கள் உள்ளன. இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி இக்குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டெடுத்தது.

மேலும் வேங்கான் தெருவில் கடந்த 30 ஆண்டுகளாக முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த திருப்பாற்கடல் தீர்த்த குளத்தை சட்ட போராட்டம், அறவழி போராட்டம் நடத்தி இக்குழு மீட்டது குறிப்பிடத்தக்கது. சிதம்பரம் நகரில் உள்ள குளங்களை தூர்வாரி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியதற்காக இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன், செயலாளர் வி.சந்திரசேகர் ஆகியோருக்கு ரீச் ஹெரிடேஜ் பவுன்டேஷன், உயரிய விருதான் ரீச் ஹெரிடேஜ் அவார்டு என்ற விருதிற்கு தேர்வு செய்துள்ளது.

இவர்களுக்கு வருகிற நவ.29-ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் எழுத்தாளர் கலைமாமணி வி.பாலக்குமாரன் முன்னிலையில் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் விருதினை வழங்கி கவுரவிக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.