புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நவ.29-ல் சிதம்பரத்தில் ரயில்மறியல்: அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு முடிவு

கார்நாடகத்தில் காவிரி ஆற்றில் இரு அணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி டெல்டா கடை மடை பகுதிகளைச் சேர்ந்த சிதம்பரம்,

News image
Updated On :19 நவம்பர் 2014, 12:39 pm

ஜி.சுந்தரராஜன்

கார்நாடகத்தில் காவிரி ஆற்றில் இரு அணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி டெல்டா கடை மடை பகுதிகளைச் சேர்ந்த சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

சிதம்பரம் வடக்குமெயின்ரோட்டில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக வளாகத்தில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பின்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சி.மாதவன் செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது:

கடந்த நவ.16-ம் தேதி தஞ்சாவூரில் டெல்டா பாசன அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் கூடி, கர்நாடகத்தில் இரு அணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி வருகிற நவ.29-ம் தேதி டெல்டா பாசன மாவட்டங்களில் ரயில் மறியல், பஸ்மறியல் போராட்டங்களை அறிவித்துள்ளனர். அதே தினத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்கள் சார்பில் கர்நாடகத்தில் இரு அணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், காவிரி நீர் கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும், கடலூர் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாட்டை போக்க வேண்டும்,

சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், பாதிக்கப்பட்டு பயிர்கள் குறித்து கணக்கீடு செய்ய வேண்டும், பயிர் காப்பீடு செய்யும் தேதியை டிச.31-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும், ரூ.44 கோடி செலவில் வீராணம் ஏரி தூர்வாரப்படும் பணி அறிவிப்போடு உள்ளது. உடனடியாக ஏரியை தூர்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.29-ம் தேதி சிதம்பரத்தில் ரயில்மறியலும், காட்டுமன்னார்கோயிலில் சாலைமறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

மேலும் போராட்டத்திற்கு ஆதரவு கோரி அனைத்துகட்சி மற்றும் வணிகர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் நவ.21-ம் தேதி சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதியில் நடத்தவுள்ளோம் என சி.மாதவன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.