அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக கவுன்சிலர்கள் 5 பேர்ராஜினமா

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் அடிப்படை பணிகள் செய்வதற்கு ஒன்றிய கவுன்சிலர்களிடம் கலந்தாய்வு செய்யாமல் தன்னிச்சையாக செயல்படும் ஒன்றியக் குழு தலைவரை கண்டித்து 5 அதிமுக ஒன்றியக் கவுன்சிலர்கள் திடீர் ராஜினமா கடிதம் அளித்து விட்டு வெளிநடப்பு செய்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On :21 நவம்பர் 2014, 4:31 pm

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் அடிப்படை பணிகள் செய்வதற்கு ஒன்றிய கவுன்சிலர்களிடம் கலந்தாய்வு செய்யாமல் தன்னிச்சையாக செயல்படும் ஒன்றியக் குழு தலைவரை கண்டித்து 5 அதிமுக ஒன்றியக் கவுன்சிலர்கள் திடீர் ராஜினமா கடிதம் அளித்து விட்டு வெளிநடப்பு செய்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 விருதுநகர் மாவட்டம், எம்.ரெட்டியபட்டியில் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் இயங்கி வருகிறது. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 15 ஒன்றியக் கவுன்சிலர்கள் பங்கேற்ற ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. இந்தக்கூட்டத்திற்கு ஒன்றியக் குழுதலைவர் இந்திரா மோகன் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜூபொன்னு முன்னிலை வகித்தார். இதில், ஒரு சில வார்டுகளில் ஒன்றியக் குழு தலைவர் இந்திரா மோகன், வார்டு உறுப்பினர்களை கலந்து ஆய்வு செய்யாமல் தன்னிச்சையாக பணிகளை தேர்வு செய்தாராம். அதோடு, ஒன்றியக் கவுன்சிலர்களையும் மதிப்பதில்லை எனவும் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வார்டு மு.கந்தசாமி, 6-வார்டு ம.நடராஜன், 15-வது வார்டு மு.ஜெயலட்சுமி, 13-வது வார்டு ஆ.ராமு, 14-வது வார்டு ப.போத்திராஜ் ஆகிய ஒன்றியக் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் அடிப்படை வசதிகள் பணிகள் மேற்கொள்வது குறித்து கலந்தாய்வு செய்யாமல் பணிகள் மேற்கொள்கின்றனர். இதனால், கிராம மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி ஒன்றியக் குழு தலைவர் இந்திரா மோகனிடம் அதிமுகவைச் சேர்ந்த 5 கவுன்சிலர்களும் தங்களது ராஜினமா கடிதங்களை அளித்துவிட்டு வெளிநடப்புச் செய்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம்  அப்பகுதியில் உள்ள அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.