/

பழனி-பொள்ளாச்சி அகலரயில்பாதையில் வேகசோதனை ஓட்டம்

பழனி-பொள்ளாச்சி இடையே அகலரயில் பாதை நிறைவு பெற்ற நிலையில் வரும் நவ.25, 26 தேதிகளில் வேகசோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதால் பொதுமக்களுக்கு

News image
Updated On :21 நவம்பர் 2014, 2:54 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி-பொள்ளாச்சி இடையே அகலரயில் பாதை நிறைவு பெற்ற நிலையில் வரும் நவ.25, 26 தேதிகளில் வேகசோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

     இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  பழனி - பொள்ளாச்சி இடையே புதிதாக அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையில் கடந்த அக்டோபர் 16ம் தேதி மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி தலைமையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.  இப்பணிகள் திருப்திகரமாக இருந்த நிலையில்  இதை தொடர்ந்து ரயில் பாதுகாப்பு ஆணையர் மிட்டல் தலைமையில் வரும்  நவம்பர் 24 மற்றும் 25 ம் தேதிகளில் வேக சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.   இதனால் பொது மக்கள், ரயில் பாதை அருகே வசிப்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வரும் நவம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் பழனி - பொள்ளாச்சி இடையே புதிதாக அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையின் அருகே செல்ல வேண்டாம், கால்நடைகளை மேய்க்க வேண்டாம் எனவும் இந்த பாதையில் உள்ள ஆளில்லா லெவெல் க்ராஸிங்குகளை கடக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.