கடலூர் காவல் நிலையத்தில் தமிழக கடலோர காவல்படை ஐ.ஜி.கே.சொக்கலிங்கம் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் கடற்கரையோர காவல் நிலையங்களான கடலூர் முதுநகர், கடலூர் துறைமுகம் ஆகியவற்றில் தமிழக கடலோர காவல்படை ஐ.ஜி. கே.சொக்கலிங்கம் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் கோப்புகள், மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது உயிர்பாதுகாப்பு கவசங்களை கண்டிப்பாக அணிந்து செல்ல வேண்டும். இது படகு கவிழ்வது, வலையில் சிக்கிக்கொள்வது போன்றவற்றிலிருந்து காப்பாற்றும். அதேப்போன்று மீனவர்கள் எல்லையைத் தாண்டிச் சென்று மீன் பிடிக்க முயற்சிக்கக் கூடாது. இது தொடர்பாக இன்று (நவ.25) கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் கடலூர் மாவட்ட மீனவர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி!

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?

'16' புதிருக்கான விடையை அவ்வளவு எளிதாக சொல்லிவிடமாட்டேன்! ராகுல்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

