தமிழ்நாட்டில் அதிமுக- திமுக கட்சிகளால் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை புதிய கட்சியால் நிரப்புவோம் என்றார் வாசன் அணியின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஞானசேகரன்.
திருச்சியில் 28ஆம் தேதி நடைபெறவுள்ள முன்னாள் அமைச்சர் ஜி.கே. வாசனின் புதிய கட்சி தொடக்க விழாப் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்படும் பணிகளை புதன்கிழமை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
புதிய கட்சியின் தொடக்க விழாப் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இசை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. 5 மணிக்கு தலைவர்கள் பேசத் தொடங்குவார்கள். இரவு 8 மணிக்கு புதிய கட்சியின் பெயரையும், கொள்கைக் குறிப்பையும் வெளியிட்டு பேசுகிறார் வாசன்.
8 ஆயிரம் வேன்கள், ஆயிரம் பேருந்துகள், 3 ஆயிரம் கார்களை தொண்டர்களின் வருகைக்காக பதிவு செய்திருக்கிறோம். ஏறத்தாழ 3 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
வாகனங்களை நிறுத்துவதற்காக பொன்மலை ரயில்வே திடல், மன்னார்புரம் ராணுவத் திடல் உள்ளிட்ட 7 இடங்கள் காவல்துறையின் ஒப்புதலுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேடைப் பகுதியில் 2 ஆயிரம் உயர்அழுத்த விளக்குகள் அமைக்கப்படுகின்றன.
தொண்டர்களுக்கான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்துத் தரப்படுகின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மாவட்ட எல்லைகளான 9 இடங்களில் வரவேற்புக் குழுவினர் வாகனங்களைப் பதிவு செய்து உள்ளே அனுப்பி வைப்பார்கள். 5 லட்சம் தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கப்படவுள்ளன.
காமராசர் வழியில் 1996-ல் தனது புதிய கட்சியை மூன்றே நாள்களில் தொடங்கி அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் 20 எம்பிக்களையும், 39 எம்எல்ஏக்களையும் பெற்று சாதனை படைத்தார் ஜி.கே. மூப்பனார்.
தற்போது தமிழக நலன்களைப் புறந்தள்ளி காங்கிரஸ் அரசு செயல்பட்டதால் கட்சியில் தொய்வு ஏற்பட்டது. இதனைப் பல முறை தலைமைக்கு வாசன் சுட்டிக்காட்டினார். யாரும் கேட்கவில்லை. தற்போது புதிய கட்சியைத் தொடங்குகிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

'16' புதிருக்கான விடையை அவ்வளவு எளிதாக சொல்லிவிடமாட்டேன்! ராகுல்

தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ. 865 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வு!

தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

