காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிதம்பரத்தில் நாய்கள் அட்டகாசம்: நகரமன்ற உறுப்பினரை நாய் கடித்தது!

சிதம்பரம் நகரில் நாய்கள் பெருக்கம் அதிகமாகி நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. குறிப்பாக காலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்வோர் முதல் சாலையில் போவோர், வருவோரை நாய்கள்

News image
Updated On :26 நவம்பர் 2014, 3:11 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் மதிமுகவைச் சேர்ந்த நகரமன்ற உறுப்பினர் எல்.சீனுவாசனை நாய் கடித்தது. காலில் காயமுற்ற அவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

சிதம்பரம் நகரில் நாய்கள் பெருக்கம் அதிகமாகி நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. குறிப்பாக காலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்வோர் முதல் சாலையில் போவோர், வருவோரை நாய்கள் துரத்துவதும், கடிப்பதுமாக உள்ளது. இதனால் நகர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சிதம்பரம் நகராட்சிக்கு நாய் பிடிக்கும் வாகனம் ரூ.8 லட்சம் செலவில் வழங்கப்பட்டு, பேட்டரி இல்லாததால், வாகனம் இயக்கப்படாமல் நகராட்சி வளாகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தைச் சேர்ந்த சிதம்பரம் நகரமன்ற உறுப்பினர் எல்.சீனுவாசனை புதன்கிழமை காலை தனது வார்டினை சுற்றி பார்க்க சென்றுள்ளார். அப்போது அங்காளம்மன் கோயில் தெருவில் அங்கிருந்த நாய்களில், ஒரு நாய் திடீரென நகரமன்ற உறுப்பினர் சீனுவாசனிள் காலில் கடித்தது. பின்னர் அருகிலிருந்து நாய்களை துரத்தி விட்டனர். நாய் கடித்ததில் காலில் காயமுற்ற உறுப்பினர் சீனுவாசன் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனைக்கு சென்று நாய்கடிக்கான ஊசி போட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். எனவே நகராட்சி நிர்வாகம், நாய் பிடிக்கும் வாகனத்திற்கு பேட்டரி வாங்கி அதனை இயக்கி நாய்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.