கேரளத்தில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், அங்கிருந்து தேனி மாவட்டம் வழியாக தமிழகத்துக்கு கோழி, வாத்து மற்றும் முட்டைகள் கொண்டு வருவதை தடுப்பதற்கு தமிழக எல்லையில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கேரளத்தில் உள்ள கோட்டயம், ஆழப்புலா ஆகிய மாவட்டங்களில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் நோய் பாதித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய், பாதிக்கப்பட்ட வாத்து இனத்தில் இருந்து மற்ற பறவை இனங்களயும், மனிதர்களையும் தாக்கும் வாய்ப்பு உள்ளது. பறவை காய்ச்சல் நோய் வைரஸ் பன்றிகள் மூலம் பறவை இனங்களையும், மனிதர்களையும் பாதிக்கும்.
கேரளத்தில் பறவை காய்ச்சல் நோய் பாதிப்பு உள்ளதால், அங்கிருந்து தமிழகத்துக்கு கோழி, வாத்து மற்றும் முட்டைகள் கொண்டு வர அரசு தடை விதித்துள்ளது. கேரளத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக கோழி, வாத்து மற்றும் முட்டைகள் கொண்டு வருவதை தடுப்பதற்கு, தமிழக எல்லையில் உள்ள லோயர்கேம்ப், கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய இடங்களில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்டத்தில் வாத்து முட்டைகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும், இறைச்சி விற்பனைக் கடைகளில் அன்றாடம் சோதனை நடத்தவும், பறவைக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சுகாதாரத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் அறிகுறி, பாதிப்பு மற்றும் சந்தேகங்கள் இருப்பின், மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குரை, செல்போன் எண்:944500 01122-ல் பாùதுமக்கள் மற்றும் கோழி, வாத்து வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாடல் போட்டு அவமதித்ததாக ஆர்சிபி அணி டிஜே மீது பிசிசிஐயில் புகாரளித்த சிஎஸ்கே.!

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை உமங் செயலியில் பதிவிறக்கம் செய்யும் முறை!

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்தால் அவரவர் வீட்டிலேயே உணவு கிடைக்காது! - மத்திய அமைச்சர்

கோவையில் பரபரப்பு... ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன் விநியோகித்த திமுக நிர்வாகிகளை பிடித்த அதிமுகவினர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

