காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிதம்பரத்தில் கந்தசஷ்டி சூரசம்ஹாரவிழா!

சிதம்பரத்தில் நடைபெற்ற கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு நவவீரர்கள் வீதிஉலா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2014, 5:33 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் நடைபெற்ற கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு நவவீரர்கள் வீதிஉலா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீநடராஜர் கோயில் மேலகோபுர வாயிலில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா உடனுறை ஸ்ரீமுத்துக்குமரப் பெருமான் கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா கடந்த நவ.22-ம் தேதி தொடங்கியது. தினந்தோறும் முருகன் பெருமைகள் குறித்து ஆன்மீக சொற்பொழிவுகள், சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முனைவர் ரா.அன்பழகன், புலவர் தி.பொன்னம்பலம், தமிழாசிரியர்கள் ச.விநாயகம்,  ரா.கருணாநிதி,  பி.செல்வம், ஜி.சுந்தரி, மா.ஆறுமுகம் உள்ளிட்டோர் சொற்பொழிவாற்றினர்.

வியாழக்கிழமை இரவு சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு செங்குந்த மரபினர்கள் நவவீரர்கள் வேடமணிந்து பாவாமுதலியார் தெருவிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு சென்றடைந்தனர். அங்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 9 மணிக்கு சிதம்பரம் தெற்குரதவீதியில் சூரணை, முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் காட்சி வெகுசிறப்பாக நடைபெற்றது. திரளான பொதுமக்கள் பங்கேற்று மகாசூரசம்ஹார நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

பின்னர் இரவு சூரனை சம்ஹாரம் செய்தபிறகு வெள்ளிமயில் வாகனத்தில் ஸ்ரீமுத்துக்குமர பெருமான் செங்குந்த நவவீர்கள் புடைசூழ வீதியுலா வந்தார். சூரசம்ஹார நிகழ்ச்சியை தி.பொன்னம்பலம் வர்ணனை செய்தார்.  இந்நிகழ்ச்சியில் செங்குந்தர் பரம்பரை டிரஸ்டி தில்லை.ராஜ்நடராஜ் செங்குந்தர், ரத்தின.நடராஜன், சி.பி.கே.ஸ்ரீதரன், அ.விஸ்வநாதன், பி.குமார், சி.பி.ஆர்.சிவராஜன்,  எஸ்.குப்புசாமி,  பொறியாளர் சிவசங்கரன், பி.எஸ்.சபாரத்தினம்,  கே.முருகேசன், க.தில்லைகோவிந்தன், பழனிவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை செங்குந்த மரபினர் மற்றும் கோயில் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர். நவ.28-ம் தேதி தேவசபை எனும் பேரம்பலத்தில் வேடமங்கை வேழவேங்கை வேலவர் திருக்கல்யாண மஹோற்சவம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.