அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

சரமாரியாக வெட்டிச் சாய்த்த இளைஞர்: பள்ளி மாணவனை வகுப்பறையில் கொன்றதால் பதற்றம்

தூத்துக்குடி மாவட்டம் அயன்கரிசல்குளத்தை சேர்ந்தவர் கோபல் என்பவரின் மகன் பாஸ்கர் (14), பந்தல்குடியில்

Updated On :28 நவம்பர் 2014, 9:56 am

தூத்துக்குடி மாவட்டம் அயன்கரிசல்குளத்தை சேர்ந்தவர் கோபல் என்பவரின் மகன் பாஸ்கர் (14), பந்தல்குடியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை 8.50 மணிக்கு பள்ளிக்கு வந்தார் பாஸ்கர். வகுப்பறையில் அமர்ந்திருந்த போது திடீரென அங்கு வந்த மாரீஸ்வரன் என்பவர், பாஸ்கரின் நெற்றியில் அரிவாளால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். காயமடைந்த மாணவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பரின் மகன் மாரிஷ்வரன் (19), மாந்திரிகம் செய்து வருபவர் என்றும், கடந்த 8 மாதங்களுக்கு முன் நரபலி கொடுப்பதற்காக பாஸ்கரனை கடத்தி சென்றதாகவும், இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு பாஸ்கர் தப்பி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பள்ளியில் மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் அரசு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த பந்தல்குடி போலீசார் மகேஷ்வரன், மாவட்ட முதன்மை தலைவர் ஜெயகுமார் ஆகியோர் அப்பகுதியில் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.