பழனியில் முருங்கைக்காய் கிலோ ரூ.150 ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் காய்கறிகளில் முக்கிய பங்கை முருங்கைக்காய் பெற்றுள்ளது. முருங்கை மரத்தின் பூ, காய், இலைகள் அனைத்தும் உணவாக பயன்படுவதோடு மருந்தாகவும் பயன்படுகிறது. முருங்கைக்காய் திருமண


பழனியில் முருங்கைக்காய் கிலோ ரூ.150க்கு வெள்ளிக்கிழமை விற்பனையானது.
தமிழகத்தில் காய்கறிகளில் முக்கிய பங்கை முருங்கைக்காய் பெற்றுள்ளது. முருங்கை மரத்தின் பூ, காய், இலைகள் அனைத்தும் உணவாக பயன்படுவதோடு மருந்தாகவும் பயன்படுகிறது. முருங்கைக்காய் திருமண நிகழ்ச்சிகளிலும், உணவு விடுதிகளிலும் அதிகம் பயன்படுத்தப்படும். தற்போது கார்த்திகை மாதம் துவங்கியுள்ளதால் பலரும் சபரிமலைக்கு விரதம் பூண்டுள்ளதால் வீடுகளில் இறைச்சியின் பயன்பாடு வெகுவாக குறைந்து காய்கறிகள் பயன் அதிகரித்துள்ளது.
பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் அதிக பரப்பளவில் செடி முருங்கை பயிர் செய்யப்பட்டுள்ளது. கடந்த வறட்சி, தொடர்மழையால் பல இடங்களில் முருங்கை மரங்கள் சாய்ந்து விட்ட நிலையில் தற்போது முருங்கை சாகுபடி வெகுவாக குறைந்துவிட்டது. இந்நிலையில் முருங்கையின் பயன்பாடு அதிகரித்து சாகுபடி குறைந்துள்ள நிலையில் பழனியில் கடைகளில் முருங்கைக்காய் வெள்ளிக்கிழமை கிலோ ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு பெரிய அளவிலான முருங்கைகள் எட்டு மட்டுமே நிற்கும் நிலையில் ஒரு முருங்கைக்காய் சுமார் 25 ரூபாய்க்கு மேலாக இருந்ததால் காய்கறி வாங்குவோர் பலரும் முருங்கை்ககாயை எட்டாக்கனியாக பார்த்து விட்டு சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...