காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு: இருவர் பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்

புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட வந்து குற்றவாளிகள் இருவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

News image
Updated On :28 நவம்பர் 2014, 5:04 pm

ஜி.சுந்தரராஜன்

புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட வந்து குற்றவாளிகள் இருவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

புதுச்சேரி பெரியகாட்டுகுப்பத்தில் கடந்த நவ.19-ம் தேதி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் மனோகர் என்பவர் ஒருகும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் இதுவரை போலீஸார் 5 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வந்தனர். இந்நிலையில் இக்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த அழகர் (38), சிலம்பரசன் (36) ஆகிய இருவர் வெள்ளிக்கிழமை கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில், நீதிபதி பரமசிவம் முன்பு சரணடைந்தனர். சரணடைந்த இருவரையும், நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து இருவரும் கடலூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.