தேனி மாவட்டத்தில் கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் செயல்பட்டு வரும் கதர் விற்பனை நிலையங்களில் கதர் ஜவுளி ரகங்களுக்கு 30 சதவிகதம் தற்றுபடி வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.
தேனி நகராட்சி பழைய பஸ் நிலைய வணிக வளாகத்தில் வியாழக்கிழமை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்து அவர் கூறியது: நலிவடைந்த நிலையில் உள்ள கிராமப்புற கைவினைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து, அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு கதர் கிராம தொழில் வாரியத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
கதர் விற்பனை நிலையங்களில் அண்ணா, பெரியார், காமராஜர், காந்திய
டிகள் பிறந்த நாள் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் ஜவுளி ரகங்களுக்கு 30 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்களுக்கு கடன் சலுகை வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் கடந்த 2013-ம் ஆண்டு கதர் விற்பனை நிலையங்களுக்கு பண்டிகை கால விற்பனை குறியீடாக ரூ.50 லட்சம் நிர்ணியக்கப்பட்டு, ரூ.23 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு கதர் விற்பனை நிலையங்களில் ரூ.45 லட்சத்துக்கு ஜவுளி விற்பனை செய்ய குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் பொதுமக்கள் கதர் ஜவுளி ரகங்களை தள்ளுபடி விலையில் வாங்கி பயன்படுத்தி கதர் கிராமத் தொழில் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு ஆதவரளிக்க வேண்டும் என்றார். கதர் வாரிய மேலாளர் சாந்தான கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு

சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதிக்கு முன்னேறிய 4 அணிகள்!

தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு! நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி 3 மணிக்கு உரை!
கவனம் ஈர்த்த அர்ஜுன் தாஸ் பட புரோமோ!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

