எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கதர் விற்பனை நிலையங்களில் 30 சதவிகிதம் தள்ளுபடி

தேனி மாவட்டத்தில் கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் செயல்பட்டு வரும் கதர் விற்பனை நிலையங்களில் கதர் ஜவுளி ரகங்களுக்கு 30 சதவிகதம் தற்றுபடி வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.

Updated On :3 அக்டோபர் 2014, 7:17 am

தேனி மாவட்டத்தில் கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் செயல்பட்டு வரும் கதர் விற்பனை நிலையங்களில் கதர் ஜவுளி ரகங்களுக்கு 30 சதவிகதம் தற்றுபடி வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.

தேனி நகராட்சி பழைய பஸ் நிலைய வணிக வளாகத்தில் வியாழக்கிழமை க஗ாந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்து அவர் கூறியது: நலிவடைந்த நிலையில் உள்ள கிராமப்புற கைவினைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து, அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு கதர் கிராம தொழில் வாரியத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.

கதர் விற்பனை நிலையங்களில் அண்ணா, பெரியார், காமராஜர், காந்திய

டிகள் பிறந்த நாள் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் ஜவுளி ரகங்களுக்கு 30 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்களுக்கு கடன் சலுகை வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் கடந்த 2013-ம் ஆண்டு கதர் விற்பனை நிலையங்களுக்கு பண்டிகை கால விற்பனை குறியீடாக ரூ.50 லட்சம் நிர்ணியக்கப்பட்டு, ரூ.23 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு கதர் விற்பனை நிலையங்களில் ரூ.45 லட்சத்துக்கு ஜவுளி விற்பனை செய்ய குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் பொதுமக்கள் கதர் ஜவுளி ரகங்களை  தள்ளுபடி விலையில் வாங்கி பயன்படுத்தி கதர் கிராமத் தொழில் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு ஆதவரளிக்க வேண்டும் என்றார். கதர் வாரிய மேலாளர் சாந்தான கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.