சிதம்பரத்தில் உள்ள சித்தர்பீடமான ஸ்ரீபிரம்மராயர் கோயிலில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மகாசண்டி யாகம் நடத்தப்பட்டது. ஸ்ரீநடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் 36 பேர் பங்கேற்று 3 அடி உயரத்திலான யாககுண்டத்தில் யாகத்தை நடத்தினர். 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட 1768 வகை மூலிகைகள், பட்டைகள், நெய், மஞ்சள், மலர்கள், பழங்கள், காய்கறிகள் கொண்டு இந்த யாகம் நடத்தப்பட்டன. காலை 6 மணிக்கு தொடங்கிய மாலை 4 மணிக்கு முடிவுற்றது. இந்நிகழ்ச்சியில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ஏ.அருண்மொழிதேவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்வி ராமஜெயம் (புவனகிரி), நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோயில்), முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.கே.மாரிமுத்து, சிதம்பரம் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், தொகுதி இணைச் செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, நகர துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.