புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தமிழகத்தில் முதல்முறையாக தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் பயின்ற 16 பேருக்கு வேலை நியமன ஆணை!

தமிழ்நாட்டில் தொலைதூரக்கல்வி இயக்கக வரலாற்றில் முதல் முறையாக அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தி 16 மாணவர்களுக்கு பணி

News image
Updated On :14 அக்டோபர் 2014, 3:02 pm

ஜி.சுந்தரராஜன்

தமிழ்நாட்டில் தொலைதூரக்கல்வி இயக்கக வரலாற்றில் முதல் முறையாக அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தி 16 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் பணி அமர்த்தல் பிரிவு சமீபத்தில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் முதல் கட்டப்பணியாக தொலைதூரக்கல்வி இயக்கக மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை தொலைதூரக்கல்வி இயக்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தியது. முகாமில் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள திருச்சி புளு சிப் உள்ளிட்ட பல்வேறு பிரபல நிறுவனங்கள் நேரடியாக வந்து மாணவர்களை ஆர்வத்துடன் தேர்வு செய்தனர்.

வேலைவாய்ப்பு முகாம் தொடக்க விழாவில் வணிகவியல் பிரிவு தலைவர் முனைவர் கே.விஜயராணி வரவேற்றார். தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் முனைவர் ஆர்.எம்.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். உற்பத்தி மர்றும் பொறியியல் துறை பேராசிரியர் ரகுகாந்தன் வாழ்த்துரையாற்றினார். வேலைவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் சி.சமுத்திரராஜ்குமார் விளக்கவுரையாற்றினார். பேராசிரியர் ஆர்.இளங்கோவன் நன்றி கூறினார். இதனை தொடர்ந்து நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட தமிழக வரலாற்றில் முதல்முறையாக தொலைதூரக்கல்வி மூலம் பயின்ற 16 மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் என்.பஞ்சநதம் பங்கேற்று பணிநியமண ஆணை பெற்ற மாணவர்களை வாழ்த்திப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.