சிதம்பரத்தில் கடலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சிதம்பரத்தில் கடலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.


சிதம்பரத்தில் கடலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டத்தில் திமுக உள்கட்சி தேர்தல் நடைபெற்று, நகர, ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மாவட்ட திமுக நிர்வாகிகள் 158 பேரை தேர்வு செய்து அவர்களிடம் ஆய்வு மேற்கொள்ள தனியாக கடிதம் அனுப்பினார்.
அதன் அடிப்படையில் அழைப்பு விடுத்த கடலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆய்வு மேற்கொள்ள வைத்தீஸ்வரன்கோயிலிருந்து புதன்கிழமை காலை சிதம்பரம் நகருக்கு மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அமைச்சருடன் கடலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உடன் வந்தார். மு.க.ஸ்டாலினை சிதம்பரம் வைப்புச்சாவடியில் நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமையில் திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.
பின்னர் மு.க.ஸ்டாலின் சிதம்பரம் கீழவீதியில் உள்ள கிராண்ட் பார்க் ஹோட்டலில் நடைபெற்ற மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றனார். ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.
கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு அழைப்பு அனுப்பப்பட்ட மாணவரணி, மகளிரணி, வட்டார, ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகளை அழைத்து, கட்சி பணிகள் குறித்தும், மாவட்ட நிர்வாகிகள் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...