மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ராணுவ வீரரின் இரு சக்கர வாகனத்திலிருந்த ரூ.1.50 லட்சம் திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் ராணுவ வீரர் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தின்

Published On :

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் ராணுவ வீரர் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து அதிலிருந்த ரூ.1.50 லட்சம் பணத்தைத் திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், பெருமாள்பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் ரமேஷ் (32). இவர் இந்திய ராணுவத்தில் லேன்ட்ஸ் நாயக் ஆக பணிபுரிந்து வருகிறார். ஒரு மாத விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ள ரமேஷ், வீட்டிற்கு காலி மனை வாங்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கி சென்று ரூ.1.50 லட்சம் எடுத்துள்ளார். உடன் சென்ற தந்தை ஜெயராஜை, வங்கியில் நகைக் கடன் பெறுவதற்காக அமர வைத்துவிட்டு ரமேஷ், தனது இரு சக்கர வாகனத்தில் நகராட்சி அலுவலகம் சென்றுள்ளார்.

வங்கிலிருந்து எடுத்த பணத்தை இரு சக்கர வாகனத்தின் பக்கவாட்டில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டி இருந்துள்ளார். வண்டியை நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்திவிட்டு, அலுவலகத்தினுள் சென்று வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக விசாரித்துவிட்டு சுமார் 30 நிமிடங்கள் கழித்து திரும்ப வந்துள்ளார். வந்து பார்த்தபோது, வண்டியின் பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடு போயிருந்தது தெரிய வந்ததது.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.