வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தொடர் மழை : அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.சனிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் அதிகபட்சமாக

News image
Updated On :18 அக்டோபர் 2014, 6:37 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் அதிகபட்சமாக 133 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 65 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 74.8 மி.மீ மழையும் பெய்துள்ளது. இதனையடுத்து அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2,760.88 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 775 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து பாபநாசம் அணையின் நீர்மட்டம் 4.60 அடி உயர்ந்து அணையின் நீர்மட்டம் 67.65 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 3.28 அடி உயர்ந்து 78.94 அடியாகவும்,

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 56.20 அடியாகவும் இருந்தது.

பாபநாசம் அணை மூடல்: நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடிப்பதால் மணிமுத்தாறு, கடனாநதி அணைகள் மூடப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை பாபநாசம் அணையும் மூடப்பட்டது. பாபநாசம் கீழ் அணையில் 140 மி.மீ மழை பெய்துள்ளதால் அகஸ்தியர் அருவி வழக்கத்தை விட நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாசனக் கால்வாய்களில் நீர்வரத்து கணிசமாக செல்கிறது.

நீர்மட்டம் நிலவரம்: கடனாநதி அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 53.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 74.85 கனஅடி நீர்வரத்து இருந்தது. ராமநதி அணையின் நீர்மட்டம் 3.50 அடி உயர்ந்து 51.00 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 74.58 கனஅடி நீர்வரத்து இருந்தது.

கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 38.39 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 109.50 அடியாகவும், வடக்குபச்சையாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 7.00 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 10.95 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 4.00 அடியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.