விருதுநகர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் வருகிற அக்.26 மற்றும் நவ.2 ஆகிய நாள்களில் நடைபெற இருக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அக்.15ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் வாக்காளர் சேர்க்கைக்கான படிவங்கள் அக்.15 முதல் நவ.10ம் தேதி வரையில் பெறப்பட இருக்கிறது. எனவே சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியல்கள் அங்கிகாரம் பெற்ற அரசியல் கட்சி பிரமுகர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் அங்கிகாரம் பெறாத கட்சிகள் ரூ.100 செலுத்தி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வாக்காளர் பட்டியல் அடங்கிய குறுந்தகடுகளை பெற்றுக் கொள்ளலாம்.
விருதுநகர் பகுதியில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி முகாம், சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதில், இதுவரையில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், தொகுதிக்குள் மாற்றம் உ்ள்ளிட்டவைகளை மேற்கொள்வதற்காக வாக்குச் சாவடி அலுவலர்களிடம் பொதுமக்கள் படிவங்களை ஆர்வத்துடன் அளித்தனர். அதோடு, அரசியல் கட்சியினரும் 18 வயது பூர்த்தி அடைந்த வாக்காளர்களை பெயர் சேர்ப்பதற்கான படிவங்களையும் அளித்தனர்.
இதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட நாள்களில் 855 வாக்குச் சாவடி மையங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மேலும், ஒவ்வொரு வாக்குச் சாவடி மையங்களிலும் நியமிக்கப்பட்ட அலுவலர்களிடம் வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், தொகுதிக்குள் இடமாற்றம், முகவரி மாற்றம் பொதுமக்கள் யாவரும் மனு அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த முகாம் வருகிற 31-ம் தேதி வரையில் சுருக்க திருத்த முகாம் நடைபெற இருப்பதாக தேர்தல் பிரிவு வட்டாட்சியர் நடராஜன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! லாபத்தில் ரியல் எஸ்டேட் பங்குகள்!!

வருமான வரித்துறை அதிகாரிகள் தன்னை சிறை பிடித்துள்ளனர்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

இயக்குநர் அட்லி - பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை!

செல்வப்பெருந்தகை சிறைபிடிப்பு! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

