விருதுநகர் அருகே கண்மாய் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்த பொறியியல் கல்லூரி மாணவர்களை தாக்கியது தொடர்பாக ஆமத்தூர் போலீஸார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
விருதுநகர் அருகே ஆமத்தூர் தனியார் பொறியியல் கல்லூரியில் வினோத்குமார், அருண்குமார் மற்றும் பாண்டீஸ்வரகுமார் ஆகியோர் படித்து வருகின்றனர். இவர்கள் வெள்ளூர் ஊரணிக்கரை கண்மாய் அருகே வியாழக்கிழமை மாலையில் சைக்கிள்களை நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்தார்களாம். அப்போது, அங்கு வந்த பெயர் தெரியாத அடையாளம் தெரிந்த 3 பேரும் மிதிவண்டிகளை கீழே தள்ளினார்களாம்.
இது குறித்து மாணவர்கள் கேட்டதற்கு 3 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கினார்களாம். இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்களை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் வினோத்குமார் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! லாபத்தில் ரியல் எஸ்டேட் பங்குகள்!!

வருமான வரித்துறை அதிகாரிகள் தன்னை சிறை பிடித்துள்ளனர்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

இயக்குநர் அட்லி - பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை!

செல்வப்பெருந்தகை சிறைபிடிப்பு! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

