ஆசிரியர் தினம் பெயர் மாற்றத்திற்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் கண்டனம்
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5, ஆசிரியர் தினமாக அனைத்துப் பள்ளிகளிலும் கடைபிடிக்கப் பட்டுவருகிறது. ஆனால்,


மத்தியஅரசு, செப்.5 அன்று கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தை, குரு உத்சவ் என பெயர் மாற்றுவதற்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அவ்வியக்க பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5, ஆசிரியர் தினமாக அனைத்துப் பள்ளிகளிலும் கடைபிடிக்கப் பட்டுவருகிறது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இந்த ஆண்டு முதல் ஆசிரியர் நாளை “குரு உத்சவ்” என்றப் பெயரால் கொண்டாட வேண்டும் என இந்திய மனித வள மேம்பாட்டுத் துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்த அறிவிப்பு மோடி அரசின் மேலும் ஒரு சமற்கிருதத் திணிப்பு, ஆரிய மேலாண்மை முயற்சியாகும். இதனை தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். மத்திய அமைச்சர்கள் இணைய தளத்தில் இந்தியில் செய்திப் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்றும், மத்திய மேல்நிலை வாரியப் பள்ளிகளில் சமற்கிருத வாரம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவித்த பாரதிய ஜனதா அரசு, தற்ப்போது அந்த வரிசையில் குரு உத்சவ் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 5 ஐ ஆசிரியர் தினத்தை தமிழகப் பள்ளிகள் கடைபிடித்து வருகின்றன. ஆசிரியர் என்ற சொல்லுக்கு வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு மதசார்பற்ற சொற்கள் புழக்கத்தில் உள்ளன. அவ்வாறே ஆசிரியர் தினம் அழைக்கப்பட்டு நிகழ்ந்து வருகின்றது. இவற்றையெல்லாம் மாற்றி குருஉத்சவ் என்ற ஒற்றைத் தொடரால் அழைக்கச் சொல்வது அப்பட்டமான சமற்கிருத மற்றும் ஆரிய திணிப்பு ஆகும்.
குரு, குருகுலம் போன்ற சமஸ்கிருத முறைமையின் மூலம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஜாதி மக்கள் கல்வி பெறுவதிலிருந்து தள்ளி வைக்கப்பட்டதே இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு. இப்போது ஜனநாயக ஆட்சிக் காலத்தில் குரு உற்சவ் என அழைப்பது மீண்டும் சாதி ஒடுக்கு முறையை கொண்டு வரும் மறைமுக முயற்சியாகும். மோடி அரசின் இந்த அநீதியான முயற்சியை தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இச் சுற்றறிக்கையை இந்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என அறிக்கையில் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...