தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

சிதம்பரத்தில் இன்று அதிகாலை இருவர் வெட்டிக் கொலை:  குண்டு வீச்சில் கார் வீடுகள் சேதம்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மர்மகும்பல் ஒன்று வீடுபுகுந்து இருவரை வெட்டிக் கொலை செய்து, அவர்கள் இருவரது தலையையை மட்டும்

News image
Updated On :2 செப்டம்பர் 2014, 4:12 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மர்மகும்பல் ஒன்று வீடுபுகுந்து இருவரை வெட்டிக் கொலை செய்து, அவர்கள் இருவரது தலையையை மட்டும் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு வைத்து விட்டு தலைமறைவானது. மேலும் அக்கும்பல் வரும் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் இரு நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைநகர் கலுங்குமேடு பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் குமார் (34), இவரது தம்பி ராஜேஷ் (32) இருவரும் தனியார் ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்கள் வைத்துள்ளனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை துணியால் மூடிக்கொண்டு வந்த மர்மகும்பல் குமார் வீட்டிற்கு வந்தனர். அங்கு காவலுக்கு இருந்தவர்களை வெடிகுண்டு வீசியும். அரிவாளால் தாக்கினர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று ஆம்புலன்ஸ் குமார், அவரது தம்பி ராஜேஷ் ஆகிய இருவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து, இருவரது தலையை மட்டும் எடுத்துக்கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவுவாயில் முன்பு வைத்துவிட்டு தலைமறைவாகினர்.

தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல் மற்றும் தலைகளை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெடிக்காமல் இருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.  

கடந்த மே.3-ம் தேதி அதிகாலை சிதம்பரம் மாரியப்பாநகர் 2-வது தெற்கு குறுக்குத்தெருவில் வீட்டின் தரைதளத்தில் வாடகைக்கு வசித்து வந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரியும் அருள்பிரசாத் (34) வீட்டில் வெடிகுண்டு வெடித்தது. இதில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான திண்டுக்கல் நாகல்நகர் 4-வது தெருவைச் சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராம் (34) படுகாயமுற்றார். மேலும் அந்த வீட்டிலிருந்து டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, யுஎஸ்ஏ முத்திரை பதித்த 6 எம்எம் துப்பாக்கி, சீனா செல்போன், அரிவாள்கள் மற்றும் டைரி, சிம்கார்டுகள், பான்கார்டுகள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டன.

இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து பல்கலை ஊழியர் அருள்பிரசாத் (34),  அண்ணாமலைநகர் திருவக்குளத்தைச் சேர்ந்த பட்டாபிராமன் (25). சீர்காழியைச் சேர்ந்த சந்தோஷ் (25), அண்ணாமலைநகர் வி.எம்.கோவிந்தமாசி காலனியைச் சேர்ந்த சுரேந்திரன் (33) ஆகியோரை தனிப்படை போலீஸார் மே.7-ம்தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட தனிப்படை போலீஸார் சிதம்பரம் அண்ணாமலைநகர் வி.எம்.கோவிந்தசாமி காலனியைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியான சுரேந்திரன் (33) என்பவரை திங்கள்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேற்கண்டவர்கள் அண்ணாமலைநகர் குமாரை கொலை செய்ய திட்டமிட்டு, வெடிகுண்டு தயாரித்ததாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு வெடித்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளளனர். இந்நிலையில் அண்ணாமலைநகர் குமார் மற்றும் அவரது தம்பி ராஜேஷ் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.